2 தெச 2:2 - பரிசுத்த பைபிள்2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஏதாவது இறைவாக்கினாலோ, அறிக்கையினாலோ, எங்களிடமிருந்து வந்தது என சொல்லப்படுகிற கடிதத்தினாலோ, கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென சொல்லப்பட்டால், அதைக்குறித்து நீங்கள் நிலைகுலைந்து போகவோ, திகிலடையவோ வேண்டாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 எங்களுடைய போதனை எனக் கூறி, “கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டது” என ஒரு இறைவாக்கு உரைக்கப்பட்டாலோ, வாய்மொழியாக அறிவிக்கப்பட்டாலோ, அல்லது எங்களுடைய கடிதத்தில் உள்ளது எனச் சொல்லப்பட்டாலோ அதைக் குறித்து நீங்கள் நிலைதடுமாறவோ, பீதியடையவோ வேண்டாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். Viz kapitola |