2 சாமு 3:13 - பரிசுத்த பைபிள்13 தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் குமாரத்தி மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்வேன்; ஆனாலும், ஒரு காரியம் உன்னிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், நீ என்னுடைய முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் மகளான மீகாளை அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என்னுடைய முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அதற்குத் தாவீது, “நல்லது! நான் ஒரு உடன்பாட்டிற்கு வருவேன்; ஆனால் நீ என் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றவேண்டும். அது என்னவெனில், மறுபடியும் என்னைப் பார்க்க வரும்போது, சவுலின் மகள் மீகாளை அழைத்துக்கொண்டு வராமல் என் முன்னே வரக்கூடாது” என்று சொல்லச் சொன்னான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன்; ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி, Viz kapitola |