1 பேது 4:13 - பரிசுத்த பைபிள்13 கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வதால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இதன் மூலம் கிறிஸ்து தம் மகிமையைக் காட்டும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்து, சந்தோஷத்தால் மனம் நிறைவீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்கள் எந்தளவு பங்குகொள்கின்றீர்களோ அந்தளவு சந்தோஷப்படுங்கள். அப்போது அவருடைய மகிமை வெளிப்படுகையில் நீங்கள் சந்தோஷமும் அதிக மனமகிழ்ச்சியும் அடைவீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். Viz kapitola |