Online Bible

- Reklamy -




1 கொரி 8:10 - பரிசுத்த பைபிள்

10 உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 இப்படிப்பட்ட அறிவுள்ள நீங்கள், விக்கிரக வழிபாட்டுக் கோவிலில் இருந்து சாப்பிடுவதை, பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு, அவனும் தூண்டப்படுவான் அல்லவா?

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 இப்படிப்பட்ட அறிவுள்ளவனாகிய நீ, விக்கிரக கோவிலில் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால் அவனும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்குத் துணிவான் அல்லவா?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?

Viz kapitola kopírovat




1 கொரி 8:10

Následuj nás:

Reklamy


Reklamy