1 கொரி 3:5 - பரிசுத்த பைபிள்5 அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியை செய்கின்ற உங்களை விசுவாசத்திற்குள் வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள் தானே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. Viz kapitola |