1 கொரி 15:28 - பரிசுத்த பைபிள்28 எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அவர் இவற்றையெல்லாம் செய்தபின்பு, மகனாகிய அவரும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்தியவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே, இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 இறைவன் இவற்றையெல்லாம் செய்த பின்பு அவருடைய மகனாகிய கிறிஸ்துவும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்திய அவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். Viz kapitola |