1 நாளா 24:6 - பரிசுத்த பைபிள்6 செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் குமாரன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது ராஜா மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் குமாரன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமார் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 லேவியனும் எழுத்தாளனுமான நெதனெயேலின் மகன் செமாயா அரசன், அதிகாரிகள், ஆசாரியன் சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலேக்கு, ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் குடும்பத் தலைவர்கள் ஆகியோர் முன்பாக அவர்களுடைய பெயர்களைப் பதிவுசெய்தான். எலெயாசாரின் குடும்பத்திலிருந்து ஒருவனும், இத்தாமாரின் குடும்பத்திலிருந்து ஒருவனுமாக சீட்டின் மூலம் மாறிமாறி தெரிவு செய்யப்பட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது. Viz kapitola |