Online Bible

- Reklamy -




செப்பனியா 3:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 ஆகையால் நான் கொள்ளையடிக்க எழும்பும் நாள்வரை எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய கடுங்கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் ஊற்றும்படி தேசங்களைச் சேர்க்கவும், இராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்செய்தேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் நெருப்பினால் அழியும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும் நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார். நான் எல்லா நாடுகளையும் அரசுகளையும் ஒன்றுகூட்டி, என் கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன். அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால் முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 கர்த்தர், “எனவே, காத்திருங்கள்! நான் வந்து நின்று தீர்ப்பளிக்கும்வரை காத்திருங்கள். நான் பல நாடுகளிலிருந்து ஜனங்களை அழைத்துவந்து உன்னைத் தண்டிப்பதற்கு அதிகாரம் உடையவர். நான் எனது கோபத்தை உனக்கு எதிராகக் காட்ட அவர்களைப் பயன்படுத்துவேன். நான் எவ்வளவு கோபம் கொண்டேன் என்பதைக் காட்ட அவர்களைப் பயன்படுத்துவேன். நாடு முழுவதும் அழிக்கப்படும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.

Viz kapitola kopírovat




செப்பனியா 3:8

Následuj nás:

Reklamy


Reklamy