சகரியா 12:7 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிமக்களுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாமலிருக்க, யெகோவா யூதாவின் கூடாரங்களை முதலாவது காப்பாற்றுவார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 “யெகோவா முதலாவதாக யூதாவின் குடிகளைப் பாதுகாப்பார். இதனால் தாவீது வீட்டாரின் மேன்மையும், எருசலேம் குடிகளின் மேன்மையும், யூதாவின் மேன்மையைவிட பெரியதாக இருக்காது. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 கர்த்தர் முதலில் யூதா ஜனங்களைக் காப்பாற்றுவார். எனவே, எருசலேம் ஜனங்கள் அதிகமாகத் தற்பெருமை கொள்ள முடியாது. எருசலேமிலுள்ள தாவீதின் குடும்பமும், மற்ற ஜனங்களும் யூதாவின் ஜனங்களைவிடத் தம்மைப் பெரியவர்களாகப் புகழ்ந்துக்கொள்ள முடியாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார். Viz kapitola |