ரோமர் 7:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 முன்பு நான் மோசேயின் சட்டம் இல்லாமல் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் கட்டளை வந்தபொழுது, பாவத்திற்கு உயிர்வந்தது. நானோ செத்தவனானேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 முன்பு சட்டங்கள் இல்லாதவனாய் இருந்தபோது நான் உயிர் உள்ளவனாய் இருந்தேன். சட்டவிதி வந்த பிறகு பாவம் உயிர் கொண்டது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஒரு காலத்தில் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது நான் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் எப்போது நீதிச்சட்டம் வந்ததோ, அப்போது பாவம் உயிர் பெற்றது, நானோ உயிரற்றுப் போனேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். Viz kapitola |