ரோமர் 15:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும், மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் நல்ல எதிர்பார்ப்பு பெருகும்படி, நல்ல எதிர்பார்ப்பின் இறைவன், நம்பிக்கையினால் உண்டாகும் எல்லா மனமகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. Viz kapitola |