வெளிப்படுத்தல் 16:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 கர்த்தர் சொன்னதாவது, “இதோ, நான் திருடனைப்போல் வருகிறேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது உடைகளை ஆயத்தமாய் வைத்திருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்பொழுது அவன் நிர்வாணமாய் வெளியேப்போய், பகிரங்கமாய் வெட்கத்திற்குட்படமாட்டான்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்15 “கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 “இதோ, நான் ஒரு திருடனைப் போல் வருகின்றேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது ஆடைகளை அணிய ஆயத்தமாய் வைத்திருக்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்போது அவன் நிர்வாணமாய் நடக்காமலும், பகிரங்கமாய் வெட்கத்துக்கு உள்ளாகாமலும் இருப்பான்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். Viz kapitola |