பிலிப்பியர் 4:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 மீண்டும் எனக்கு உதவி செய்ய, இப்பொழுதாவது உங்களுக்கு முடியுமாயிருப்பதைக் குறித்து கர்த்தரில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள், ஆனாலும் அதை வெளிக்காண்பிப்பதற்கு ஏற்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிவேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை. Viz kapitola |