லூக்கா 14:31 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 “அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் உட்கார்ந்து அவன், இருபதாயிரம் வீரர்களோடுத் தன்னை எதிர்த்து வருபவனை, தான் தன்னிடம் உள்ள பத்தாயிரம் வீரர்களோடு எதிர்த்து நிற்கமுடியுமா என்று யோசித்துப்பார்க்க மாட்டானோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்31 “ஓர் ராஜா மற்றோர் ராஜாவுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். ராஜாவிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற ராஜாவைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 “அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் அவன் உட்கார்ந்து, இருபதாயிரம் வீரர்களோடு தன்னை எதிர்த்து வருபவனை, தன்னிடமுள்ள பத்தாயிரம் வீரர்களைக் கொண்டு தோற்கடிக்க முடியுமோ என்று யோசித்துப் பார்க்க மாட்டானோ? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ? Viz kapitola |