புலம்பல் 4:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் எங்கள் கண்கள் மங்கிப்போயின; எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே! Viz kapitolaபரிசுத்த பைபிள்17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று. ஆனால் எந்த உதவியும் வரவில்லை. எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். Viz kapitola |