புலம்பல் 1:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. Viz kapitola |