எரேமியா 49:37 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 நான் ஏலாமியரை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகவும், அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கச்செய்து, என் கோபத்தின் கடுமையாகிய தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிக்கும்வரை பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 தங்கள் உயிரை வாங்கத் தேடுகிற எதிரிகளுக்கு முன்பாக நான் ஏலாமை நொறுக்குவேன். என்னுடைய கடுங்கோபத்தினால் பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்வரை வாளுடன் அவர்களைப் பின்தொடர்வேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்37 நான் ஏலாமை, அவர்களின் பகைவர்கள் கவனிக்கும்போதே துண்டுகளாக உடைப்பேன். அவர்களைக் கொல்ல விரும்பும் ஜனங்களின் முன்னால் ஏலாமை நான் உடைப்பேன். நான் அவர்களுக்குப் பயங்கரமானவற்றைக் கொண்டு வருவேன். நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன், என்பதைக் காட்டுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் ஏலாமைத் துரத்தும்படி வாளை அனுப்புவேன். நான் அவர்கள் அனைவரையும் கொல்லும்வரை அந்த வாள் அவர்களைத் துரத்தும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி, Viz kapitola |