எரேமியா 46:27 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்துக் காப்பாற்றுவேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியுடனும் பயமில்லாமல் இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்வார் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 “என் தாசனாகிய யாக்கோபே! நீ பயப்படாதே! இஸ்ரயேலே! நீ சோர்ந்து போகாதே! நான் நிச்சயமாக உன்னைத் தூரதேசத்திலிருந்தும், உன் வழித்தோன்றல்களை அவர்கள் நாடுகடத்தப்பட்ட நாட்டிலிருந்தும் காப்பாற்றுவேன். யாக்கோபுக்குத் திரும்பவும் சமாதானமும், பாதுகாப்பும் உண்டாகும். அவனை ஒருவனும் பயமுறுத்தமாட்டான். Viz kapitolaபரிசுத்த பைபிள்27 “யாக்கோபே, என் ஊழியக்காரனே, பயப்படாதே! இஸ்ரவேலே! அஞ்ச வேண்டாம்! அந்தத் தூரமான இடங்களிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன். சிறைப்பட்டிருக்கிற நாடுகளிலிருந்து நான் உன் பிள்ளைகளை மீட்பேன். யாக்கோபு மீண்டும் சமாதானமும் பாதுகாப்பும் பெறுவான். அவனை எவரும் பயமுறுத்த முடியாது.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை. Viz kapitola |