ஏசாயா 62:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று யெகோவா தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 யெகோவா தனது வலது கரத்தினாலும் வலிய புயத்தினாலும் ஆணையிட்டுக் கூறியது: “நான் உங்கள் தானியத்தை, இனி ஒருபோதும் உங்கள் பகைவர்களுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உங்கள் உழைப்பினால் உண்டான புதிய திராட்சரசத்தை பிறர் இனி ஒருபோதும் குடிக்கமாட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்தார். கர்த்தர் தன் சொந்த வல்லமையைச் சான்றாகப் பயன்படுத்தினார். கர்த்தர் தன் வாக்குறுதியைக் காப்பாற்ற தனது வல்லமையைப் பயன்படுத்துவார். கர்த்தர் சொன்னார், “உங்கள் உணவை உங்கள் பகைவர்களுக்கு மீண்டும் கொடுக்கமாட்டேன் என்று வாக்களிக்கிறேன். நீங்கள் உருவாக்கிய திராட்சைரசத்தை உங்கள் பகைவர்கள் மீண்டும் எடுத்துக்கொள்ள விடமாட்டேன் என்று வாக்களிக்கிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார். Viz kapitola |