ஏசாயா 52:5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் மக்கள் வீணாகக் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை பரிகாசம் செய்கிறார்கள்; எப்போதும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று யெகோவா சொல்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 “இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார். “எனது மக்கள் காரணமில்லாமல் கொண்டுசெல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அலறச் செய்கிறார்கள், எனது பெயரும் நாளெல்லாம் தொடர்ந்து தூஷிக்கப்படுகிறது” என்று யெகோவா அறிவிக்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 இப்போது என்ன நடந்தது என்று பார்! இன்னொரு நாடு எனது ஜனங்களை எடுத்துக்கொண்டது. என் ஜனங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நாடு என் ஜனங்களை ஆளுகின்றனர், அவர்களைப் பார்த்து நகைக்கின்றனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என்னையும் என் நாமத்தையும் ஏளனம் செய்கிறார்கள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். Viz kapitola |