ஏசாயா 51:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய மக்களுக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் கடுங்கோபத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 உன் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே, தமது மக்களுக்காக வாதாடும் உன் இறைவன் கூறுகிறார்: “உன்னை மதிமயக்கும் பாத்திரத்தை உன் கைகளிலிருந்து எடுத்துக்கொண்டேன்; எனது கோபத்தின் பாத்திரத்தில் நீ இனி ஒருபோதும் குடிக்கமாட்டாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்22 உனது தேவனும், கர்த்தருமாகிய ஆண்டவர் அவரது ஜனங்களுக்காகப்போரிடுவார். அவர் உன்னிடம், “பார், விஷக்கிண்ணத்தை (தண்டனை) உன்னிடமிருந்து எடுத்துவிடுகிறேன். உன்னிடமிருந்து எனது கோபத்தை நீக்கிக்கொள்கிறேன். இனிமேல் எனது கோபத்தால் நீ தண்டிக்கப்படமாட்டாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. Viz kapitola |