ஏசாயா 45:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 யெகோவா கூறுவதாவது: அவர் வானங்களை உருவாக்கினார், அவரே இறைவன்; அவர் பூமியை உருவமைத்துப் படைத்தார்; அவரே அதை அமைத்தார். அது வெறுமையாயிருக்க அவர் படைக்கவில்லை, குடியிருப்புக்காகவே அதை உருவாக்கினார். அவர் கூறுவதாவது: “நானே யெகோவா, என்னையன்றி வேறொருவருமில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்18 கர்த்தரே தேவன்! அவர் வானத்தையும் பூமியையும் படைத்தார். கர்த்தர் பூமியை அதனுடைய இடத்தில் வைத்தார். கர்த்தர் பூமியைப் படைத்ததும் அது காலியாக இருப்பதை விரும்பவில்லை. அவர் அதனை வாழ்வதற்குரியதாகப் படைத்தார். “நானே கர்த்தர். வேறு தேவன் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை. Viz kapitola |