ஏசாயா 44:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடிக்காமல் களைத்துப்போகிறான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்து, கரி நெருப்பிலிட்டு உருக்கி, சுத்தியலால் அடித்து விக்கிரகத்தை வடிவமைக்கிறான்; தன் கையின் பெலத்தினால் அதற்கு உருவத்தைக் கொடுக்கிறான். பட்டினியினால் அவன் தன் பெலனை இழக்கிறான், தண்ணீரைக் குடிக்காமல் சோர்ந்துபோவான். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 ஒரு வேலைக்காரன் கருவிகளைப் பயன்படுத்தி சூடான உலையிலே இரும்பைக் காய வைத்தான். அவன் தன் சுத்தியைப் பயன்படுத்தி உலோகத்தை அடித்ததால் அது சிலையானது. இந்த மனிதன் தனது வல்லமை வாய்ந்த கைகளைப் பயன்படுத்தினான். ஆனால், அவனுக்குப் பசி வரும்போது தனது வல்லமையை இழக்கிறான். அவன் தண்ணீர் குடிக்காவிட்டால் பலவீனன் ஆகிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். Viz kapitola |