எபிரெயர் 7:2 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான். மெல்கிசேதேக்கினுடைய முதற்பெயரின் பொருள், “நீதியின் அரசன்” எனப்படுகிறது. அத்துடன், “சாலேமின் அரசன்” என்றால், “சமாதானத்தின் அரசன்” என்ற அர்த்தமும் இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான். (சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் ராஜா” என்ற பொருளும் “சலேமின் ராஜா” என்பதற்கு “சமாதானத்தின் ராஜா” என்ற பொருளும் உண்டு.) Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அப்போது ஆபிரகாம் தான் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். முதலாவதாக, மெல்கிசேதேக் என்ற இவரது பெயரின் பொருள், “நீதியின் அரசர்” என்பதாகும். அத்துடன் “சாலேமின் அரசர்” என்றால், “சமாதானத்தின் அரசர்” என்ற அர்த்தமும் இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். Viz kapitola |