ஆதியாகமம் 48:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: “தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்” என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 அன்றையதினம் அவன் அவர்களை ஆசீர்வதித்துச் சொன்னது: “ ‘எப்பிராயீம், மனாசேயைப்போல் உங்களையும் இறைவன் பெருகப்பண்ணுவாராக’ என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்.” இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்20 இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான். “இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவரை வாழ்த்துவார்கள். அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான். இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான். Viz kapitola |