எஸ்தர் 7:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்திரவாதம் பண்ணமுடியாது என்றாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஏனெனில் நானும் எனது மக்களும் அழிவுக்கும், கொலைக்கும், நாசத்திற்கும் விற்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் ஆணும் பெண்ணும் அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட நான் பேசாமல் இருந்திருப்பேன். ஏனெனில், அப்படியான ஒரு துன்பம் அரசரை கஷ்டப்படுத்துவதற்கு ஏற்ற காரணமாய் இருந்திருக்காது” என்றாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 எங்களை அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப் போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள். Viz kapitola |