உபாகமம் 12:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 “ஆனாலும் உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, நீ உன் வாசல்களிலெங்கும் உன் விருப்பப்படியே மிருகஜீவன்களை அடித்து சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் சாப்பிடுவதுபோல சாப்பிடலாம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்தின்படியே, உங்கள் பட்டணங்களில் நீங்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொன்று, விரும்பிய அளவு இறைச்சியைச் சாப்பிடுங்கள். வெளிமானையும், கலைமானையும் அடித்துச் சாப்பிடுவதுபோல அடித்துச் சாப்பிடலாம். சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிறவர்களும், சுத்தமாயிருக்கிறவர்களும் அதைச் சாப்பிடலாம். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 “நீங்கள் எங்கெல்லாம் வசிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் விரும்பிய வெளிமான், கலைமான் போன்ற விலங்குகளை அடித்து சாப்பிடலாம். நீங்கள் உங்கள் விருப்பப்படி எவ்வளவு இறைச்சி வேண்டுமானாலும் உண்ணலாம். அந்த அளவிற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். யார் வேண்டுமானாலும் அவர்கள் சுத்தமானவர்களாக தேவனை தொழுதுகொள்ள தகுதி உடையவர்களானாலும் சரி, சுத்தமின்றி தேவனை தொழுதுகொள்ள தகுதி இல்லாதவராயினும் சரி, இறைச்சி உணவை சாப்பிடலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம். Viz kapitola |