அப்போஸ்தலர் 6:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவர்கள் பொய்ச்சாட்சிகளை நிறுத்தினார்கள். அவர்கள், “இவன், இந்தப் பரிசுத்த இடத்திற்கும், மோசேயின் சட்டத்திற்கும் விரோதமாய்ப் பேசுகிறதை நிறுத்துகிறதில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அவர்கள் பொய்ச் சாட்சி கூறும்படி சிலரை ஏற்படுத்தினார்கள். அவ்விதம் ஏற்படுத்தப்பட்டவர்கள் “இவன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும், நீதிச்சட்டத்திற்கும் விரோதமாய் பேசுகின்றதை நிறுத்துவதாக இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்; Viz kapitola |