அப்போஸ்தலர் 26:31 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில், “இவன் மரணதண்டனையையோ, சிறைத்தண்டனையையோ பெறுவதற்குத் தகுதியான எதையும் செய்யவில்லை” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். Viz kapitola |