அப்போஸ்தலர் 24:5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 “இந்த பவுல் குழப்பத்தை விளைவிக்கிறவனாய் இருக்கிறதை நாங்கள் கண்டோம். உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் மத்தியில், இவன் குழப்பத்தை மூட்டி வருகிறான். இவனே நசரேய பிரிவினரின் தலைவனாயிருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 “இந்த மனிதன் குழப்பம் விளைவிக்கின்றவனாய் இருப்பதை நாங்கள் கண்டோம்; உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் வாழுமிடங்களில் எல்லாம் இவன் கலவரங்களை தூண்டிவிடுகிறான். இவனே நசரேய மதப்பிரிவினரின் தலைவனாயிருக்கிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். Viz kapitola |