அப்போஸ்தலர் 23:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 விடியற்காலமானபோது, யூதர்களில் சிலர் கூடி, தாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரைக்கும் புசிப்பதும் குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 மறுநாள், சில யூதர்கள் காலையிலேயே ஒன்றுகூடி பவுலைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் அதை நிறைவேற்றும் வரை சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லை என்றும், அதை நிறைவேற்றாவிடில் அது தங்களுக்கு சாபமாய் அமைவதாக என்றும் பொருத்தனை செய்துகொண்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். Viz kapitola |