அப்போஸ்தலர் 16:40 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து, லீதியாளின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சகோதரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுச் சென்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து லீதியாளின் வீட்டிற்குப் போனார்கள். அங்கே அவர்கள் சகோதர சகோதரிகளைச் சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுப் போனார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள். Viz kapitola |