2 இராஜா 19:28 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், நான் என் கொக்கியை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.” Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 எனக்கு எதிராகக் கோபங்கொண்டு, எனக்குக் காட்டும் அவமதிப்பும் என் காதுகளுக்கு எட்டியது. ஆகையால் என்னுடைய கொக்கியை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியாய் உன்னைத் திரும்பச்செய்வேன்.’ Viz kapitolaபரிசுத்த பைபிள்28 ஆமாம் நீ என்னிடம் அலுத்துக்கொண்டாய். உனது பெருமிதமான நிந்தனைகளைக் கேட்டேன். எனவே நான் உனது மூக்கில் துறட்டை மாட்டுவேன். நான் உனது வாயிலே எனது கடிவாளத்தை மாட்டுவேன். பிறகு நான் உன்னை சுற்றிவிடுவேன். வந்த வழியே திரும்பிப்போகச் செய்வேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார். Viz kapitola |