2 இராஜா 19:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 “ ‘வெகுகாலத்துக்கு முன்னமே நான் அதைத் திட்டமிட்டேன் என்பதை நீ கேள்விப்படவில்லையா? பூர்வ நாட்களில் நான் அதைத் திட்டமிட்டேன். இப்பொழுது அவற்றை நடைபெறச் செய்திருக்கிறேன். அதனால் நீ அரணான பட்டணங்கள் எல்லாவற்றையும் கற்குவியலாக மாற்றினாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 “இதைத்தான் நீ சொன்னாய் ஆனால் தேவன் சொன்னதை நீ கேட்டிருக்கவில்லை. நான் (தேவன்) நீண்ட காலத்திற்கு முன்பே அதனைத் திட்டமிட்டேன். பழங்காலத்திலிருந்தே நான் அதனைத் திட்டமிட்டேன். இப்போது, நிகழும்படி செய்கிறேன். கோட்டையமைந்த நகரங்களை அழிக்க உன்னை அனுமதித்தேன். அவற்றை பாறைகளாகும்படி மாற்றினேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன். Viz kapitola |