1 தெச 2:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 பிரியமானவர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் கஷ்டமும் உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே; இறைவனுடைய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்தபோது யாருக்கும் நாங்கள் சுமையாய் இராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்தோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 சகோதர சகோதரிகளே! நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை நான் அறிவேன். இரவும் பகலுமாக நாங்கள் பணியாற்றினோம். தேவனுடைய நற்செய்தியைப் பரப்பும்பொழுது உங்களில் எவர்மீதும் எவ்விதமான பொருளாதார பாரத்தையும் சுமத்த விரும்பவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 பிரியமானவர்களே, நாங்கள் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்குமே. நாங்கள் யாருக்கும் பாரமாய் இராதவாறு, இரவும் பகலும் தொழில் புரிந்துகொண்டே இறைவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். Viz kapitola |