1 தெச 1:9 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனெனில் அவ்விடத்திலுள்ள மக்களே நீங்கள் எப்படி வரவேற்றீர்கள் என்பதைப்பற்றி அவர்களே அறிவிக்கிறார்கள். நீங்கள் எவ்விதமாய் உண்மையான உயிருள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, இறைவன் அல்லாதவைகளைக் கைவிட்டு இறைவனிடம் திரும்பினீர்கள் என்பது பற்றியும் அறிவிக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட நல்வழியைப் பற்றி எல்லா இடத்திலும் இருக்கிற மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி உருவ வழிப்பாட்டை நிறுத்தினீர்கள் என்பதையும், உண்மையான, ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யும் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்பதையும் கூறுகிறார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஏனெனில், நாங்கள் உங்களிடம் வந்தபோது நீங்கள் எங்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைப்பற்றி அந்த மக்களே அறியத் தருகிறார்கள். நீங்கள் விக்கிரகங்களை வழிபடுவதைக் கைவிட்டு, உயிருள்ள உண்மையான இறைவனுக்கு அர்ப்பணித்துப் பணி செய்கின்றவர்களாக இறைவனிடம் எவ்விதமாக திரும்பினீர்கள் என்பது பற்றியும் அவர்கள் கூறி வருகின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், Viz kapitola |