1 கொரி 4:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இதற்காகவே, என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவன் எனக்கு அன்பானவன், அவன் கர்த்தரில் உண்மையுள்ளவன். அவன் கிறிஸ்து இயேசுவில், என் வாழ்க்கை முறையை உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். என் வாழ்க்கைமுறை எல்லா இடங்களிலும், எல்லாத் திருச்சபைகளிலும் நான் போதித்து வருவதன்படி அமைந்திருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்17 அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் குமாரன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 இதற்காகவே, எனக்கு அன்பானவனும் கர்த்தருக்குள் உண்மையுள்ளவனுமாகிய என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் எல்லாத் திருச்சபைகளிலும் எல்லா இடங்களிலும் போதித்து வருகின்ற கிறிஸ்து இயேசுவோடு இணைந்த என் வாழ்க்கை முறையை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். Viz kapitola |