1 நாளா 28:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாக இருந்து, இதை நடத்து: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய யெகோவா என்னும் என்னுடைய தேவன் உன்னோடு இருப்பார்; யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதின் எல்லா செய்கைகளையும் நீ முடிக்கும்வரை, அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 தாவீது தன் மகன் சாலொமோனிடம், “நீ திடன்கொண்டு தைரியத்துடன் இந்த வேலையைச் செய். பயப்படாதே, மனந்தளராதே; என் இறைவனாகிய யெகோவா உன்னோடிருக்கிறார். யெகோவாவின் ஆலயத்தில் வேலைகளெல்லாம் முடியும்வரை அவர் உன்னைக் கைவிடமாட்டார்; நீ அசைக்கப்படவுமாட்டாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்20 தாவீது மேலும் தன் குமாரன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார். Viz kapitola |