1 நாளா 25:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே: Viz kapitolaபரிசுத்த பைபிள்1 தாவீதும், படைத்தலைவர்களும் ஆசாப்பின் குமாரர்களை சிறப்பு வேலைக்காகத் தனியாகப் பிரித்தனர். ஆசாப்பின் குமாரர்கள் ஏமான், எதுத்தூன் ஆகியோர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை தேவனுக்கு சிறப்புப்பணியாகக் கொண்டனர். இதனைச் சுரமண்டலங்கள், தம்புருகள், கைத்தாளங்கள் போன்றவற்றால் செய்தனர். இவ்வகையில் பணி செய்தவர்களின் பெயர் பட்டியல் இது: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது: Viz kapitola |