Online Bible

- Reklamy -

சங்கீதம் 24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 24
தாவீதின் சங்கீதம்.

1 பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.

2 ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.

3 யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?

4 சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும் பொய் சத்தியம் செய்யாதவனுமே.

5 அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.

6 அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.

7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.

8 இந்த மகிமையின் அரசன் யார்? அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.

9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.

10 மகிமையின் அரசனான இவர் யார்? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் அரசன்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy