சங்கீதம் 128 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022சங்கீதம் 128 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 1 யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 2 உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். 3 உன் மனைவி உன் வீட்டிற்குள் கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். 4 ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான். 5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; உன் வாழ்நாட்களெல்லாம் எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. 6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக. |
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.
Biblica, Inc.