Online Bible

- Reklamy -

சங்கீதம் 126 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 126
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது.

3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.

4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும்.

5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள், மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.

6 விதைப்பதற்கான விதைகளை அழுதுகொண்டு சுமந்து போகிறவன், மகிழ்ச்சியின் பாடல்களுடன் கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy