Online Bible

- Reklamy -

சங்கீதம் 124 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


சங்கீதம் 124
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:

2 மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;

4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,

5 பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.

6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.

7 வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.

8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy