சங்கீதம் 122 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022சங்கீதம் 122 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். 1 “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். 2 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன. 3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. 4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். 5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். 6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். 7 உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” 8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். 9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன். |
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.
Biblica, Inc.