சங்கீதம் 120 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022சங்கீதம் 120 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். 1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார். 2 யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். 3 வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். 5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! 6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள். |
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.
Biblica, Inc.