Online Bible

- Reklamy -

சங்கீதம் 1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022


பகுதி i சங்கீதம் 1–41 சங்கீதம் 1

1-2 தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரிகாசக்காரருடன் உட்காராமல், யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.

3 அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.

4 தீயவர்களோ அப்படியல்ல, அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5 ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.

6 ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.

இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்

பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.

இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.

உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.

Holy Bible, Indian Tamil Contemporary Version™

Copyright © 2005, 2022 by Biblica, Inc.

Used with permission.

Biblica, Inc.
Následuj nás:



Reklamy