சங்கீதம் 150 - பரிசுத்த பைபிள்1 கர்த்தரைத் துதியுங்கள்! தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்! பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்! 2 அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்! அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்! 3 எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்! 4 தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்! 5 ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்! 6 எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்! கர்த்தரைத் துதிப்போம்! |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International