சங்கீதம் 142 - பரிசுத்த பைபிள்தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம். 1 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன். 2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன். 3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன். ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார். 4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை. 5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும். 6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள். 7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும். அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன். நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள். |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International