Online Bible

- Reklamy -

சங்கீதம் 131 - பரிசுத்த பைபிள்


ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.

1 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல. நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை. நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை. எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.

2 நான் அமைதியாக இருக்கிறேன். என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது. தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.

3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.

Tamil Holy Bible: Easy-to-Read Version

All rights reserved.

© 1998 Bible League International

Bible League International
Následuj nás:



Reklamy