சங்கீதம் 128 - பரிசுத்த பைபிள்ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல். 1 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள். 2 நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும். 3 வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள். மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள். 4 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார். 5 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன். 6 நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்! |
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International
Bible League International